கத்தர் மண்டலத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக கடந்த 11/08/2011 வியாழன் இரவு 8:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 03:00 மணி வரை ,கத்தர் சவூதி மர்கசில் ரமலான் ஸஹர் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முஹம்மத் யூசுஃப் அவர்கள் தலைமையேற்று “ஆடம்பரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் முஹம்மத் தமீம் அவர்கள் “வருந்திடுவோம் வாருங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் “மதியிழந்த பிள்ளைகளும், மனம் குமுறும் பெற்றோர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள பேராசிரியர். முஹம்மத் தாஹா (தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “அறிவுரை தான் வாழ்கையா?” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டியில் (மனனம் மற்றும் பேச்சுப்போட்டி) வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.இதை மண்டலச் செயலாளர் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் லால்குடியை சார்ந்த சகோதரர்.ரிச்சர்ட் அவர்கள் இஸ்லாத்தை தழுவி,அப்துர் ரஷீத் என தன் பெயரை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மண்டலத் தலைவர் Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, மண்டலப் பொருளாளர் பீர் முஹம்மத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.

இந்த செய்தி தி பெனின்சுலா என்ற கத்தர் நாளிதழில் வெளியானது