கத்தர் மண்டலத்தின் மாபெரும் பெருநாள் தின சிறப்பு நிகழ்சசி – பத்திரிக்கை செய்தி!

அல்லாஹுவின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக “ஹஜ்ஜுப் பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த 06-11-2011 ஞாயிறு காலை 7 மணி முதல் 8 மணி வரை “கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை [ஃபனார்]” அலுவலக கட்டிடத்தில் உள்ள கேட்போர் கூடத்தில், மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம்,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மண்டல பேச்சாளர் மௌலவி, அன்சார் மஜீதி அவர்கள் “தியாகத்திற்குத் தயாராகுவோம்” என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக சிறப்புரையாற்றினார்கள்.

மையத்தின் இணைச் செயலாளர் சகோதரர்.எம்.எஸ். ஃபக்ருத்தீன் அவர்கள் மையத்தின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கிவிட்டு,பின்னர் நன்றியுரையற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 550 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டார்கள்.வந்திருந்த அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி குறித்த செய்தி கத்தர் நாளிதழ் “கல்ஃப் டைம்ஸ் ” பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.

http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=468922&version=1&template_id=36&parent_id=16