கத்தர் மண்டலத்தின் மனித நேய பணி

கடந்த 18 ஆம் தேதி சவுதி அல்கோபர் பகுதியிலிருந்து நாகை மாவட்டம் திடச்சேரியைசேர்ந்த  சகோதரர் ருக்னுதீன் என்பவர் கத்தர் மண்டல  அலுவலகத்தை தொடர்புகொண்டு தனது சகோதரர்  பாவா பக்ருதீன் என்பவர்  கத்தரில் உள்ள முஐதெர் பகுதியில் உள்ள வீட்டில் வேலைசெய்வதாகவும் அவருக்கு22 /05/2013  அன்று  இருதய அறுவை சிகிச்சை செய்ய  இருப்பதாகவும்  அவருக்கு இங்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்றும் தான் நமது இணையதளத்தின் மூலம் கத்தார் மண்டல தொலைபேசியை தெரிந்துகொண்டு தொடர்புகொல்வதாகவும் தனது சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படியும் கேட்டுகொண்டார.

அதனடிப்படியில்19/05/2013  மண்டல துணைச் செயலாளர்கள் சகோதரர் ,அப்துர்ரஹ்மான்  மற்றும் சகோதரர்  காதர் மீரான் அவர்களும்  சகோதரர் பாவா பக்ருதீன் அவர்கள் பணிபுரியும்  முஐதெர் பகுதிக்கு சென்று அவரை நேரில் சந்தித்து அவருக்கு என்ன உதவி தேவை என்பதை கேட்க அவர் தனது அறுவை சிகிச்சைக்கு  ஆறு யூனிட்  o + வகை இரத்தம் தேவை என்றும் அந்த இரத்தம் கிடைத்தால் தான் 22/05/2013 அன்று இருதைய மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள் என்றும் தனக்கு இங்கு உதவ யாரும் இல்லை என்றும் தனக்கு இந்த உதவியை செய்யவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்

அவருக்கு ஆறுதல் கூறி நாங்கள் அணைத்து உதவிகளையும் இன்ஷா அல்லாஹ் செய்து தருவதாக சொல்லி உடனடியாக களத்தில் இறங்கி  இரத்த தானத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

சகோதரர் பாவா பக்ருதீன் அவர்கள்உடனடியாக21/05/2013 அன்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  22/05/2013  அன்று  இருதைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  தற்பொழுது  I C U UNIT இல் இருக்கிறார்  அவரை நமது மண்டல நிர்வாகிகள் சென்று பார்த்து அவருக்கு உதவி வருகின்றனர் .

அல்ஹம்துலில்லாஹ்