கத்தர் அல்வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளபில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக கடந்த 4-8-2011 அல்வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல துணைச் செயலாளர் சகோ.எம்.எஸ்.பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

அடுத்து,சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டி (மனனம் மற்றும் பேச்சுப்போட்டி) நடைபெற்றது.

மண்டலச் செயலாளர் மௌலவி.முஹம்மத் அலி,MIScஅவர்கள் நடத்திய இப்போட்டியில் 20 க்கும் அதிகமான சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

பின்பு மௌலவீ.அன்ஸார் மஜீதி அவர்கள் “உறவுகள் – ஓர் அலசல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,மௌலவீ.அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் “சென்ற ரமளானில் இருந்தவர்கள் எங்கே?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கடைசியாக,தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள பேராசிரியர்.முஹம்மத் தாஹா, MISc (தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் உலகம்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக,மனனம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் மண்டலம் சார்பாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்சி பற்றிய செய்தி gulf time நாளிதழில் வெளியானது குறிப்பிடதக்கது. மேலும் கத்தர் ற்றைபுன் பத்திரிக்கையிலும் செய்தி வெளியானது