கத்தர் அல்கோர் கிளையில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி

கடந்த 26-08-2010 வியாழக்கிழமை இரவு கத்தர் மண்டல  அல்கோர் கிளையில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அல்கோர் கிளை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் தேவியாக்குறிச்சி ஜியாவுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்க உரையாக சகோதர் மௌலவி லாயிக் அவர்கள் “கொடை கொடுப்போம் விடை கொடுப்போம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அடுத்ததாக சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் “அன்சாரிகளின் அழகிய வரலாறு “ என்ற தலைப்பில் உரையாற்றினார் . மூன்றாவது உரையாக “நபிகளாரின் இறுதி எச்சரிக்கை “ என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

இறுதியாக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் “பத்ரு போர் தரும் படிப்பினை ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது . முன்னூறுக்கும் மேற்பட்ட அல்கோர் வாழ் சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இரவு பத்து மணிக்கு தொடங்கிய இச்சிறப்பு நிகழ்ச்சி சஹர் நேரம் இரண்டு மணி வரை உற்சாகத்துடன் நடைபெற்றது . இறுதியாக பொருளாளர் செய்யத் இப்ராஹீம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !