கத்தரீல் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்!

கத்தரீல் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்!கத்தரீல் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்!கத்தரீல் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்!கத்தர் வுவுது மர்கசில் இன்று (14-8-2009) நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தாயகத்திலிருந்து கத்தர் பயணம் மேற்கொண்டுள்ள மாநில தலைவர் சகோதரர் அல்தாபி அவர்கள் தமிழகத்தில் ஜமாத் நடத்திவரும் பல்வேறு சமூக பணிகள் குறித்து விளக்கினார்.

மேலும் எஸ்.பி பட்டினம் தவ்ஹீத் பள்ளியை மீட்க , வரும் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் பற்றி விளக்கினார். பல் வேறு பொருளாதார நெருக்கடிக்கிடையே சமூதாய நன்மைக்காக களத்தில் இறங்கி போராட நேரும் போது மாவட்டம் மற்றும் கிளைகளுக்கு பொருளாதார சுமை கூடிவிடுகிறது. இதனை வெளிநாட்டு மண்டலங்கள் ஏதேனும் தங்களது பங்களிப்பை செய்தால் இப்போராட்டத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என .தலைவர் கூறினார்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று கூடியிருந்த செயல் வீரர்கள் இப்போரட்டத்திற்குன்டான அனைத்து செலவுகளையும் கத்தர் மண்டலம் ஏற்றுக்கொள்ளும் என்று ஒருமித்த குரலில் குரலெழுப்பினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அதன்படி அதற்க்கான தொகை ரூ: 1 லட்ச்சத்தை மாநிலத் தலைமைக்கு அளிப்பதாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் செயல் வீரர் கூட்டத்தில் அறிவித்தது.