அல்லாஹுவின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் கடந்த 26-8-2011 அன்று மாபெரும் மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ.சாக்ளா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆரம்பமாக தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மவ்லவி. முஹம்மத் தாஹா (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “வருமுன் காப்போம்” என்ற தலைப்பில் மறுமையின் வெற்றிக்காக தர்மத்தை முற்படுத்துவது பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
பின்பு மண்டலத் தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் மண்டல செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மண்டல செயலாளர் மவ்லவி.முஹம்மத் அலீ மற்றும் மண்டல துணைச் செயலாளர் சகோ.தஸ்த்தகீர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்ய மண்டல நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் இரவு உணவு மற்றும் தேநீர் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சி குறித்த செய்தி கத்தர் நாட்டு அரபி நாளிதழ்களான “Al Sharq மற்றும் Al Raaya” ஆகியவற்றில் வெளியானது. அல்ஹம்துலில்லாஹ்!.