கத்தரில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி

கத்தரில் சென்ற வெள்ளிக்கிழமை 03-09-2010 அன்று மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது .

அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தர் TNTJ ஆறாவது ஆண்டாக இவ்வருட ரமலானில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு ,சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்களின் துவக்க உரையாற்றினார்கள் பின்னர் சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் ” குர் ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் , ரமலானில் மையத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து கூறினார். தோஹாவின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகள் வருகை தந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் அல் ஹம்துலில்லாஹ் !