கத்தரில் பெருநாள் தின சிறப்பு நிகழ்ச்சி – பத்திரிக்கை செய்தி!

அல்லாஹுவின் அருளால் கத்தர் மண்டலத்தில் கடந்த 30-8-2011 அன்று நோன்பு பெருநாள் தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்

இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று ,”ஈதுல் பித்ர் பெருநாள் தரும் படிப்பினைகள் ” என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார்கள்.

பின்பு “இறையச்சம் – சிறியவர் முதல் பெரியவர் வரை” என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மவ்லவி .முஹம்மத் தாஹா (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக்கல்லூரி, சேலம்) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக மண்டலச் செயலாளர் மௌலவீ.முஹம்மத் அலீ அவர்கள் மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிவிட்டு நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்ச்சி குறித்த செய்தி,கத்தரில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான “கத்தர் ற்றைபுன்” இல் முகப்புப் பக்கத்திலேயே வெளியாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் gulf-times பத்திரிக்கையிலும் வெளியானது.