கத்தரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் கடந்த  30-04-2010 வெள்ளிக்கிழமை பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.

இதில் சகோதிரி சுபைதா அவர்கள் “தர்மம்” என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் ,  சகோதிரி அஷரப் நிஷா இலியாஸ் அவர்கள் “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் “ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற பெண்கள் நிகழ்ச்சியின் போது , “துஆக்கள் மற்றும் அல் குரானிலிருந்தும் ” கேட்கப்பட்ட கேள்விக்கு சிறந்த முறையில் பதில் அளித்த முதல் மூன்று சகோதிரிகளுக்கு புகாரி ஹதீத் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

இப்பரிசுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரி மர்யம் பீர் முஹம்மது அவர்களும் சகோதரி மும்தாஜ் முஹம்மத் லியாகத் அலி அவர்களும் வழங்கினார்கள்.

கத்தர் வாழ் தமிழறிந்த குடும்ப அங்கத்தினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் . அல்ஹம்து லில்லாஹ்!