கத்தரில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 21-08-2010 சனிக்கிழமை அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ,ஈத் பின் சாரிட்டியின் ஒரு அங்கமான கத்தர் கெஸ்ட் சென்டர் இணைந்து மாபெரும் இப்தார் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்களின் புண்ணியதலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் வரலாற்று பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கத்தர் கெஸ்ட் சென்டரின் தாயி சகோ. முனாப் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்தாரில் கலந்து கொண்டு சிறப்பாக்கினர்.

மஃரிப் தொழுகையின் பின் உணவு பறிமாறப்பட்டது. சகோதரர் முனாப் அவர்கள் “ரமலான் சிந்தனை” எனும் தலைப்பில் துவக்க உரையாற்றினார்.

அதனையடுத்து ” ஸிராத் “ எனும் தலைப்பில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள அல் இர்ஷாத் கல்லூரி விரிவுரையாளர் சகோ. அப்துல் கரீம் (MISC) அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இடையே, இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களின் அறிமுகம் மற்றும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய அவர்களுக்கான “அடிப்படை பயிற்சி வகுப்பில்“ கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சியை (QITC) தாயி சகோ. முஹம்மத் அலீ MISC நடத்தினார்.

தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு தலைவர் சகோதரர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் “இஸ்லாமியர்களும் பைத்துல் முகத்தஸ் இறை இல்லமும்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

இஸ்ரலேயிய படைகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில் சிக்குண்ட புண்ணியதலமான பைத்துல் முகத்தஸ் இறை இல்லத்தை குறித்து முஸ்லிம்கள் கொண்டிருக்கும் பார்வை என்ன என்பதை விளக்கினார்.

இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்வு (குலுக்கல்) முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகள் அனைத்தும் சகோ. முனாப் அவர்கள் தொகுத்து வழங்க ,சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்களின் நன்றியுரையுடன் நிரைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்