கத்தரில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு பற்றிய கருத்தரங்கம்!

கடந்த 2-4-2010 வெள்ளிக்கிழமை அன்று  மாலை 6:30 மணிக்கு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் , இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் ஜூலை 4 ஒடுக்கப்பட்டோர் உரிமை  மாநாடு பற்றிய சிறப்பு கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . QITC யின் தலைவர் சகோதரர் ஷபீர் அஹ்மத் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார் . துணைச் செயலாளர் சகோதரர் ஜியாவுதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .

முதலாவதாக “என்றென்றும் நன்மை தரக்கூடிய சதகத்துல் ஜாரியா” என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

சகோதரர் தமீம் அவர்கள் ” மாநாட்டிற்காக ஒவ்வொரு முஸ்லீமின் பங்களிப்பு ” என்ற தலைப்பில் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.