கத்தரில் நடைபெற்ற சிறப்பு இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி – நாளிதழ் செய்தி!

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக கடந்த 18/08/2011 வியாழன் இரவு 9:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:30 வரை அல்ஹோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் ரமளான் சிறப்பு இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல துணை தலைவர் சகோ.முஹம்மது அலி ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ,முதலில்,மௌலவீ.முஹம்மது தமீம் அவர்கள் “நன்றி கேட்டவர்கள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,மௌலவீ.அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் “யார் இந்த பத்ர் வாசிகள்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கடைசியாக,தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள பேராசிரியர்.முஹம்மத் தாஹா (தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “சிந்திக்கத் தூண்டும் வேதம் திருக்குர்’ஆன்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாத்தின்மீது ஆர்வம் கொண்ட லால்குடியை சார்ந்த சகோதரர். மார்டின் லுக் அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

சகோ.முஹம்மது லியாக்கத் அலி அவர்களால் ஜூலை 2011 இல் நடத்தப்பட்ட பெரியவர்களுக்கான எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த சகோதரிகள் M.R.F.ரினோஸா (1), கதீஜத்துல் நூரியா (2) மற்றும் S.ஜீனத்துல் அமீரா (3) ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
மண்டலச் செயலாளர் மௌலவீ.முஹம்மத் அலி அவர்கள் நடத்திய இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில்,போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் (17பேருக்கு) ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, மண்டல செயலாளர் தஸ்த்தகீர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இந்த செய்தி கத்தர் “Gulf Times” நாளிதழில் வெளியானது

இந்நிகழ்ச்சியில் 350 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.