கத்தரில் நடைபெற்ற சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி

alkhor-sahour-prg-009alkhor-sahour-prg-018alkhor-sahour-prg-002வியாழன் இரவு 10-09-2009 அன்று தோஹாவின் அடுத்த பெரிய நகரமான அல்கோர் என்னுமிடத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அல்கோர் கிளை , இந்நிகழ்ச்சியை அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் ஏற்ப்பாடு செய்த்திருந்தனர். முதலாவதாக சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் ” ரமலானில் தர்மம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மௌலவி லாயிக் அவர்கள் ” பவ மன்னிப்பு ” என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாபிர் அவர்கள் ” ரமலான் ஏற்ப்படுத்திய மற்றம் என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினார் .

நிகழ்ச்சியின் முடிவில் அல்கோரில் தமிழறிந்த அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் , பல புதிய சகோதரர்கள் தங்களும் ஜாமத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட அர்வமுள்ளதாக மண்டல நிர்வாகிகளிடம் கூறினர்.பஜர் தொழுகைக்கு பின்னர் அல்கோர் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் சகோதரர் நவாஸ் ( பேட்டை) அவர்கள் பொறுப்பாளர் , சகோதரர் நவாஸ் ( நாகூர் ) அவர்கள் துணை பொறுப்பாளர் , சகோதரர் ஹமீது ( ராஜகிரி ) அவர்கள் துணை பொறுப்பாளராகவும் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

புதிய அல் கோர் கிளை தேர்ந்தெடுப்பில் , QITC தலைவர் சகோதரர் ஷபீர் அவர்களும் செயலாளர் மசூத் அவர்களும், துணை செயலாளர்கள் சகோதரர் அப்துல் கபூர் , மற்றும் ஹாஜி முஹம்மது , ஜியாவுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை அல் கோர் கிளை ஒருங்கினைபாளர்களான சகோதரர் இணையத்துல்லாஹ் மற்றும் சகோதரர் நூருல்அமீன் அவர்கள் முன்னின்று செய்தார்கள்.