கத்தரில் நடைபெற்ற இரத்த தான முகாம்

Blood donation news paper photoஅல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் ஏற்ப்பாடு செய்திருந்த இம்முகாமிற்கு நூறுக்கணக்கான சகோதரர்கள் தோஹா மற்றும் தொலை தூர இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.
எல்லா சோதனைகளையும் முடித்துவிட்டு முப்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரிசையில் காத்து நின்றார்கள். பெயர் பதிவு மற்றும் உடல் பரிசோதனை 7:30 மணிக்கே நிறுத்தப்பட்டாலும் பல சகோதரர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள் .
பெயர் பதிவு செய்த சகோதரர்களுக்கே , 9:00 மணிவரை செல்லும் என்பதால் இரத்த வங்கி ஊழியர்கள் வந்திருந்த பல சகோதரர்களுக்கு அடுத்த முறை , அவசர சிக்கிச்சைகாக தேவை படும் போது அழைக்கிறோம் என்று கூறினார்கள். ” உங்கள் எண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலி நிச்சயம் வழங்குவான் ” என்று வருகை தந்து கொடுக்க முடியாமல் போன சகோதரர்களுக்கு நிர்வாகிகள் ஆறுதல் அளித்தனர். மொத்தம் 72 சகோதரர்கள் குருதி கோடை அளித்தார்கள்.
இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்துஸ் சமத் மதனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது .