கத்தரில் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 25-02-2011 அன்று கத்தர் மர்கசில் பி .ஜே அவர்களுடைய ஆன்லைன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு மார்க்க சந்தேகங்களை கேட்டனர். ஆன்லைன் மூலம் பி.ஜே அவர்கள் பதில் அளித்தார்க்ள.

இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்பாடு செய்யுங்கள் என்று மாநில தலைவர் சகோதரர் பி .ஜே அவர்கள் சொன்னது அனைவரையும் உற்சாகபடுத்தியது குறிப்பிடதக்கது.

அதிமாக மக்கள் வரவை எதிர்பார்த்ததால் , கட்டிடத்தின் வளாகத்தின் உள்ளே இருநூறு பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் போடப்பட்டு , ப்ரொஜெக்டர் மூலம் அகன்ற திரையில் , ஆன் லைன் ஒலி /ஒளி பரப்பு இணைய தளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது .

பெண்களுக்கு மர்கசின் மெயின் ஹாலில் தனி இட வசதி செய்யப்பட்டது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் , எல்லா நிர்வாகிகளும் மற்றும் செயல் வீர்களும் சிறந்த முறையில் செய்தார்கள்.