கத்தரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் கடந்த 28-05- 2010 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6  மணிக்கு ” சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ” நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்க்கு QITC யின் மூத்த நிர்வாகி சகோதரர் முஹமது யூசுப் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

முதலாவதாக சகோதரர் M.அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் “இஸ்லாத்தில் கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக கத்தருக்கு வருகை தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் M.S.ஸூலைமான் அவர்கள் ” தமிழகத்தில் கல்வியின் நிலை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக வாரவாரம் நடைபெறும் இஸ்லாமிய அறிவு போட்டியில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் ஆறு சகோதரசகோதிரிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் பரிசாக வழங்கப்பட்டது. 400 க்கும் கூடுதலாக சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தார்கள்.