கத்தரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

20-05-2010 வியாழக்கிழமை , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் வாரந்திர பயான் நடைபெற்றது .

கத்தர் இந்தய தவ்ஹீத் மையத்தின் அழைப்பின் பேரில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் M.S. சுலைமான் அவர்கள் ” அறிவை தேடி! “ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை ஆற்றினார்.

இறுதியாக ” ஜூலை மாநாட்டின் பணிகள் எதுவரை நிறைவு பெற்றிருக்கிறது என்பதை விளக்கிக்கூறினார் .

மேலும் எத்தனை பணிகள் செய்ய வேண்டியுள்ளன என்பதையும் பட்டியலிட்டார்கள். வெளி நாடு வாழ் சகோதரர்களின் பங்களிப்பு பெருமளவில் நம்பியுள்ளதாகவும் , ஆதலால் தாரளமாக தங்களுடைய உதவிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார் . மேலும் அம்மாநாட்டின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவர உதவும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்து கொண்டார்கள்.