கடையநல்லூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகர கிளையில் கடந்த 23-1-11 அன்று அல்லாஹ்வின் கிருபையால் பெண்கள் பயான் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் டிஎம். ஜபருல்லாஹ் மற்றும் நகர நிர்வாகிகள் முஹம்மது கோரி, முஹம்மது காசிம் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சிற்றுரையாற்றினார்கள். அதன் பின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ஒடுக்கத்துப் புதன் என்ற தலைப்பில் உரையாற்றிவிட்டு பெண்கள் கேட்ட மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள்.