கடையநல்லூரில் விஷக்காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் காய்ச்சலின் பாதிப்பினால் கிருஷ்ணாபுரத்தைச் சார்ந்த 3 வயதுச் சிறுமி மரணித்துவிட்டார்..இதைத் தொடர்ந்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் , சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் கடையநல்லூர் அரசு பொதுமருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நிலமைகளைக் கேட்டறிந்தனர். பின்னர் கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு கடையநல்லூரில் பரவும் விஷக்காய்ச்சல் பற்றிய நிலவரங்களைத் தெரிவித்தனர்.
பீட்டர் அல்போன்ஸ் மாவட்ட கலெக்டரைத் தொடர்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு. இராமசுப்பு அவர்களின் தலைமையில் ஒரு மருத்துவ டீம் கடையநல்லூர் மருத்துவமனைக்கு வருகை தந்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடமும், நோயாளிகளிடமும் நிலைமைகளைக் கேட்டறிந்து தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
கடையநல்லூர் அரசுப் பொது மருத்துவ மனையின் குறைபாடுகள் கடையநல்லூர் மருத்துவமனையில் சுத்தம் செய்வதற்கான துப்புரவுப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. மேலும் ஒவ்வொரு நாளும் 1500 க்கும அதிகமான புறநோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தந்த போதிலும மிகக் குறைவான மருத்துவர்களே உள்ளனர். எனவே மருத்துவர்கள் மற்றும் கமோண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் மருந்து, மாத்திரைகளின் அளவையும் அதிகரிக்க வேண்டும். கடையநல்லூர் மருத்துவ மனைக்கு அதிகமான மின்சாரம் தேவைப்படுவதால் மருத்துவ மனைக்கு மட்டும் தனியாக பிரத்யோகமான டிரான்ஸ்பார்மர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் கடையநல்லூர் மருத்துவமனைக்கு தனியாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இது போன்ற பல குறைபாடுகள் உள்ளன. இவை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளால் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.