கடையநல்லூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 02.01.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் மக்ரிப் தொழுகை வரை பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் டிஎம். ஜபருல்லாஹ் அவர்களும் நகர நிர்வாகிகளும் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கினார்.

மதரஸா மாணவி அஃப்னான் சின்னத்திரையில் சீரழியும் சமுதாயம் என்ற தலைப்பில் உரையாற்றிய பின் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சிற்றுரையாற்றினார்கள்.

பிறகு, பெண்கள் மார்க்க சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் பதிலளித்தார்கள். பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டார்கள்.