கடையநல்லூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நேற்று (08.03.2010)  மஃரிப் தொழுகைக்குப் பின் புதுத் தெரு மேலவட்டாரம் அச்சுக்கட்டி முகம்மதலி அவர்களின் வீட்டிற்கு முன்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா மாணவிகள்

1. அஃப்னான் (தொழுகையைப் பேணுவோம்)

2. புஷ்ரா (பெண்களின் ஒழுக்கங்கள்)

3. அப்னா (சின்னத் திரையில் சீரழியும் சமுதாயம்)

4. நஜ்வா (வாழ்வைக் கெடுக்கும் வரதட்சணை)

ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.

இறுதியாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் கடையநல்லூரில் நடைபெறும் சமூக அவலங்களைப் பற்றி எடுத்துரைத்து அதைக் களைவதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக உரையாற்றினார்.

இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர்.