கடையநல்லூரில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாம்!

kdnl_eye_camp_3kdnl_eye_campkdnl_eye_camp_3கடையநல்லூரில் 06.04.2008 ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் புதூர் நடுநிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது.

S.S.U சைபுல்லா ஹாஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜபருல்லாஹ், மாநில பேச்சாளர் அப்துல் நாசர் மற்றும் நகர தலைவர் முகம்மது கோரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை திருமதி ஜெயஸ்ரீ வைத்தியநாதன் தொடங்கிவைத்தார்.

சிறப்பு விருந்தினாராக காவல் துறை துணை கண்பாணிப்பாளர் அசோக் குமார் அவர்கள் கலந்து கொண்டார்கள். திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர்கள் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 370 நபர்களின் கண்களை பரிசோதித்தனர். இதில் கண் பார்வை குறைபாடு உள்ள 30 நபர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கபட்டது. கண் பார்வை முழுமையாக பாதிக்கப்பட்ட 34 நபர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு பேருந்தின் மூலம் அழைத்து செல்லபட்டார்கள்.

செயலாளர் முகம்மது காசிம், மருத்துவ அணித்தலைவர் திவான், ,பொருளாளர் பாவா, நகர துணைத்தலைவர் சேகனா தொண்டர் அணியைச் சார்ந்த முகம்மதலி, இபுறாகிம், ஜாபர், அப்துல் காதர் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுலைமான் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.