கடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி!

கடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி!கடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி!கடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி!கடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி!கடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி!கடையநல்லூரில் இயங்கிவரும் இஸ்லாமியக் கல்லூரி தவ்ஹீத் ஆலிம்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இதுரை மிகச்சிறந்த ஏராளமான தவ்ஹீத் ஆலிம்களை, பேச்சாளர்களை உருவாக்கி தந்துள்ளது.

இக்கல்லூரியில் ஆலிம் வகுப்புகளோடு, கணிணி, கணக்கு, ஆங்கிலம், போன்ற வகுப்புகளும் மிகச் சிறந்த முறையில் நடத்தப்படுவதே இக்கல்லூரியின் தனிச் சிறப்பு!

இதனால் இக்கல்லூயில் பயின்று வெளியாகும் ஆலிம்கள் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் தங்களின் தஃவா பணிகளை அமைத்துக் கொள்கின்றனர்.

இக்கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு நிகழ்ச்சி கடந்த 8-8-2009 அன்று காலை 10 மணிக்கு பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமியக் கல்லூரியின் தலைவர் ஷம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள், மேலும் இஸ்லாமிய கல்லூரி முதல்வர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

சவுதி அரேபிய இஸ்லாமிய அழைப்பாளர் அப்துஸ் ஸமது மதனீ அவர்கள் கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்ற 14 நான்கு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் இஸ்லாமிய கல்லூரி மாணவர்களால் தொகுக்கப்பட்ட இஸ்லாம் கூறும் பொருளாதாரம் என்ற தொகுப்பை நூலை எம்.எஸ் சுலைமான் அவர்கள் வெளியிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமீரக ஒருங்கினைப்பாளர் ஹாமீன் இப்பராஹீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் நிறைவுரையாற்றினார்கள்.