கடையநல்லூரில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 15.01.2011 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் காயிதே மில்லத் ஈத்கா திடலில் பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து மதுரையிலும் சென்னையிலும் ஜனவரி 27ல் நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு விளக்கப் பொதுக்கூட்டம் போரட்டக் குழு தலைவர் ஏஸ்.ஏஸ்.யூ. ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் யூசுப் ஆலி, மாவட்ட செயலாளர் செய்யது ஆலி, மாவட்ட துணைத் தலைவர் டிஏம். ஜபருல்லாஹ், மாவட்ட நலத்திட்ட செயலாளர் சுலைமான் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் ஏம். பக்கீர் முஹம்மது ஆல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இறுதியில் நகர தலைவர் முஹம்மது கோரி அவர்கள் நன்றி கூறினார்கள். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.