கடையநல்லூரில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் முபாரக், மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் மஸ்ஜிதூல் மர்யம் ஆகிய இடங்களில் மே மாதம் 1 ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு, இஸ்லாமிய கொள்கை விளக்கம், நடைமுறை ஒழுங்குகள், தொழுகைப் பயிற்சி , நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு போன்றவை கற்பிக்கப்பட்டது.இதில் 700 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதன் இறுதி நிகழ்ச்சி 16.05.2010 அன்று மாலை மஸ்ஜிதூல் முபாரக் ல் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் துணை தலைவர் சகோ.T.M.ஜபருல்லாஹ் அவர்கள் முன்னிலை வகிக்க நகரத் தலைவர் சகோ.முஹம்மது கோரி அவர்கள் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.