கடையநல்லூரில் குடிநீர் பிரச்சனை

கடையநல்லூருக்கு குடிநீர் வழங்கும் பிராதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக கடையநல்லூர் நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பாக நகரில் முஸ்­ம்கள் வசிக்கும் புதுத் தெரு, அட்டக்குளத் தெரு, அய்யாபுரம் தெரு, இரசா­யாபுரம் தெரு, பரசுராமபுரம் தெரு, இக்பால் நகர் ஆகிய தெருக்களுக்கு தண்ணீர் வராத காரணத்தால் 10..2.2011 அன்று நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் வராத காரணத்தினால் சிறிது நேரம் சாலை மறிய­ல் ஈடுபட்டனர்.

அதன் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தணிக்கைகுழு உறுப்பினர் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் நகராட்சி பொறியாளரை நேரில் சந்தித்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றார். அதன் பிறகு நகராட்சி பொறியாளர் அவர்கள் பழுதடைந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டுவிட்டது. 10..2.2011 மாலை 4 மணி முதல் 2 நாட்களுக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.