கடலூர் லால்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

18102009018-118102009013-1கடலூர் மாவட்டம் லால்பேட்டை யில் 18.10.09 ஞாயிறு அன்று மாலை மாபெரும் சமுக விழிப்பு உணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்…

மாவட்ட தலைவர் மூசா தலைமை தாங்கினார் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இதில் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் (சமுக நலன்) என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் (சீரழிவிலிருந்து சமுதாயம் சீர்பெறவேண்டும்) என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,

இப்பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பெறும் திரளாக கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் இறுதியில் பின்வரும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

1. லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள திருபந்துருத்தி-யை சேர்ந்த அப்துல் பஷீர் என்பவரின் கபர்-ரை அகற்றும் வழக்கு-ணை துரிதபடுத்தவேண்டியும் கபர்-ரை வசிக்கும் இடத்திலிருந்து அகற்றவேண்டியும் இப்பொதுக்கூட்டம் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. லால்பேட்டை-யில் பெரும்பான்மையான பெண்கள் படித்து வருவதினால் உடனடியாக
அரசு மகளிர் உயர் நிலை பள்ளி ஏற்படுத்த வேண்டும்.
3. லால்பேட்டை-யில் அரசு உயர் நிலை மருத்துவமனை அமைகவேண்டியும் கேட்டுகொள்ளபட்டது.