கடலூர் மாவட்ட தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக கடந்த 23.07.2011 அன்று பரங்கிப்பேட்டை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் மாவட்ட தலைவர் சகோ.மூஸா அவர்களின் தலைமையில் மாவட்ட தர்பியா முகாம் நடைப் பெற்றது.

இதில் கடலூர்,சிதம்பரம், லால்பேட்டை, பெண்ணாடம், மங்களம்பேட்டை, நெல்லிகுப்பம், கிள்ளை, மேல்பாட்டபாக்கம் போன்ற மாவட்டதின் பல்வேறு பகுதியிருந்து நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் ஏரளாமனோர் கலந்து கொண்டனர்.

காலை சரியாக 10.30 மணிக்கு ஆரபிக்கப்பட்ட முதல் அமர்வில் தொண்டியை சேர்ந்த சகோ.யாசர் அவர்கள் உளத் தூய்மை என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்.

அதனை அடுத்து மாநில பொதுசெயலாளர் சகோ.கோவை ரஹ்ம்மதுல்லாஹ் அவர்கள் தர்பியா வகுப்பு எடுத்தார்.

இதில் நிர்வாகிகளுக்கான ஒழுக்கங்கள் மற்றும் பண்புகள் ஆகியவற்றை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்.

பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி பகல் 2.30 மணி வரை நடைப்பெற்றது.

இதில் நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கும் மாநில பொதுசெயலாளர் சகோ.கோவை ரஹ்ம்மதுல்லாஹ் அவர்கள் பதில் அளித்தார்கள். இத்துடன் தர்பியா முகாம் நிறைவுப்பெற்றது.

புதிய செய்திகளை பலவற்றை அறிந்தவர்களாக நிர்வாகிகள் புத்துணர்வுடன் கலைந்து சென்றனர். அல்ஹம்மதுலில்லாஹ்!

நிகழ்ச்சிகான ஏற்பாட்டை பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகள்சிறப்பான முறையில் செய்துயிருந்தனர்.

எல்லாம் வல்ல நம்முடைய செயல்களுக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்கூலி வழங்குவனாக!