கடலூர் மாவட்டம் TNTJ ஆம்புலன்ஸ் அறிமுக நிகழ்ச்சி:

kadaloor_ambulance_savaiசமுதாய சேவைகளிலும் சரி, மார்க்கப் பணிகளிலும் சரி இருக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் கடலுர் மாவட்டத்தில் முதலிடம் என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தான்! இதற்காக வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செய்ய கடமைப்பட்டுள்ளோம்! பல்வேறு சூழ்நிலைகளில் மரணித்து விட்ட நம் சமுதாய மக்களாயினும் சரி, பிற சமுதாய மக்களாயினும் சரி அவர்களது சடலங்களை மருத்துவ மனைகளிலிருந்து நமது ஜீப் வாகனத்திலேயே இது வரை கொண்டு வந்தோம். தற்சமயம் அல்லாஹ்வின் கிருபையால் ரூ 2,90000 க்கு மாருதி ஆம்னி நோயாளி படுக்கை வசதியுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கென வாங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நமது மாநிலச் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருவரும் இந்த ஆம்புலன்ஸ் அறிமுக நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். 19-7-2006 பகம் 3:30 மணிக்கு கடலூர் ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டதுடன் கடலூர் மாவட்ட TNTJ யின்; சமுதாயப்பணிகளை சிறப்பித்து கூறினார். தொடர்ந்து அன்று மாலை TNTJ மாநிலச் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்ட ஆம்புலன்ஸ் அறிமுக நிகழ்ச்சி நெல்லிக்குப்பத்தில் இனிதே நடைபெற்றது!