கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 28.02.2010 அன்று விருத்தாசலம, தெய்வம் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் சகோ.மூசா  மாவட்டச் செயலாளர் சகோ,முத்து ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநிலத் துனைத் தலைவர் சகோ. கோவை ரஹ்ம்மதுல்லாஹ் , மாநிலச் செயலாளர் சகோ பாண்டி ஜின்னா கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.  இதில் கீழ்கண்ட புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் – சகோ,மூசா (கடலூர் N.T.)

செயலாளர் – சகோ.முத்து ராஜா (பரங்கிப்பேட்டை)

பொருளார் – சகோ.அபுபக்கர் (ஆயங்குடி)

துனை செயலாளர்கள்

சகோ.ஹீசைன் (மங்களம்பேட்டை)

சகோ.சேக் முஹம்மத் (சிதம்பரம்)

சகோ.தஸ்தகீர் ( பெண்ணாடம்)

மேலும் இப்பொதுக்குழுவில் பின்வரும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன:
பரங்கிப்பேட்டையில் காதலர் தின காலச்சார சீரழிவு – வை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி சார்பில் ஒட்டப்பட்ட சுவரெட்டிக்கு எதிராக  பெட்டைத்தனமாக சுவரெட்டி ஒட்டிய முகவரியற்ற  கயவர்களை. இந்த பொதுக்குழு வண்மையாக கண்டிக்கிறது.

பரங்கிப்பேட்டையில் காதலர் தின காலச்சார சீரழிவு – வை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி சார்பில் ஒட்டப்பட்ட சுவரெட்டிக்கு எதிராக  பெட்டைத்தனமாக சுவரெட்டி ஒட்டிய முகவரியற்ற  கயவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்யவேண்டும். இல்லையெனில் கடலூர் மாவட்டம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று தீர்மாணிக்கபட்டது.

பொதுமக்கள் நலண் கருதி கடலூர் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை போடும் பணியை செம்மையாகவும் மற்றும் விரைந்து முடிக்கும்படி மாவட்ட நிர்வாகத்தை இந்த பொதுக்குழு கேட்டுகொள்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ரவுடியிசத்திற்கு எதிராக மாவட்ட காவல்துறை ஆனையர் எடுத்த நடவடிக்கைகளுக்கு. இந்த பொதுக்குழு அவரை பாராட்டுகிறது.
மேலும் அனைத்து கிளைகளிலும் மார்க்க (தஃவா) மற்றும் சமுதாய பணிகளை அதிகபடுத்துமாறும். இந்த பொதுக்குழு கேட்டுகொள்கிறது.

இதில் எராளமான பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள், மு.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாயிக்கள் கலந்து கொண்டனர்.