கடலூரில் நடைபெற்ற மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்

கடலூரில் நடைபெற்ற மாணவர் அணியில் ஆலோசனைக் கூட்டம்TNTJ கடலூர் மண்டல மாணவரணியின் ஆலோசனை கூட்டம் 5/09/09 அன்று பரங்கிபேட்டை தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு தாயகத்திற்கு வந்துள்ள அமெரிக்க பல்கழை கழகத்தில் பேராசிரியராக பணிபுரியம் டாக்டர். S. ஜாபர் அலி Phd அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முத்து ராஜா, மாவட்ட மாணவரணி செயளாலர் சகோ. ரைஸுதீன், மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் திரளான மாணவர்களும் இளைஞ‌ர்களும் கலந்து கொண்டனர்.

டாக்டர். S. ஜாபர் அலி Phdஅவர்கள் கல்வியின் அவசியம் பற்றியும், மாணவரணியின் சேவைகள் பற்றியும், இதில் அதிகமாக இளைஞ‌ர்கள் பங்கெடுப்பதின் அவசியத்தை பற்றியும் வலியுருத்தி பேசினார்.

இறுதியில் கடலூர் மண்டல ( கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி) மாணவரணி செயளாலராக சகோதரர் கலீல் ரஹ்மான்(MBA). நியமிக்க பட்டார்