ஓரினச் சேர்கையை கண்டித்து தர்மபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

11தற்கால மக்கள் கற்கால மக்களுக்கு மேலே ஒரு படி போய் ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் கூடும் ஓரினச் சேர்க்கை ஆங்கில நாடுகளில் சட்டப்பூர்வ அங்கிகாரம் பெற்றுவருகின்றது. இந்தத்தீயப் பழக்கம் நபி லூத் (அலை) காலத்தில் ஆரம்பமானது. இதை ஏக இறைவன் தனது இறுதி வேதமாகிய குர்ஆனில் கண்டித்து எச்சரித்ததையும் மீறிய அந்த சமுதாயத்தை வேரோடு அழித்ததை அல்குர்ஆன் சான்று பகர்கின்றது.

ஒழுக்கக் கேடான அநாகரீகமான இந்த தீய பழக்கத்தை சுதந்திரம் என்ற பெயரால் அறிவு ஜீவிகளும் அரசியல் வியாபாரிகளும் மீண்டும் அங்கீகரிக்க ஆலாய் பறக்கின்றனர்.

இதை கண்டித்து TNTJ சார்பாக தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.