ஓரினச்சேர்கையை கண்டித்து தஞ்சை தெற்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

dsc08774dsc08770தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஓரினச் சேர்கையை ஆதரிக்கும் மத்திய அரசை கண்டித்தும், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சம்பை சாதிக் பாட்சா தலைமையில், தஞ்சை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது. கண்டன உரையை மாநிலப் பேச்சாளர் திருப்பூர் அஹ்மத் கபீர் அவர்கள் ஆற்றினார்.

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் ஓரின சேர்கைக்கு ஆதரவாக பேசிவரும் வீரப்ப மொய்லியையும், ஆதரவு கரம் நீட்டும் கனிமொழியையும் கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன. இந்திய சட்டப்பிரிவு 377 வது பிரிவில் மாற்றங்கள் செய்யக் கூடாது என்பதை வழியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.