ஒவ்வொரு தமிழன் மீதும் ரூ 14 ஆயிரம் கடன்: நிதியமைச்சர் தகவல்

தமிழகத்தில் தனி நபர் கடன் ரூ 14 ஆயிரமாக இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் க. அன்பழகன் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்குப் பதில் அளித்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தனிநபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575 ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353 ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.

தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது.

-தேடித்தந்தவர்-மதீன் முஹம்மது

தமிழகத்தில் கூலித் தொழிலாளியின் மாத வருமானமே 2 ஆயிரத்திற்குள்ள தான் இருக்கும். ஆனால் அவனுக்கு தெரியாமலே அவன் மீது உள்ள கடனோ 14 ஆயிரம்!

இதற்கெல்லாம் காரணம் வட்டியை அடிப்படையாக கொண்ட இந்திய பொருளாதாரம் தான்!

இஸ்லாம் கூறும் வட்டியில்லா பொருளாதாரம் என்றைக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அன்று தான இது போன்ற அவள நிலை ஒழியும்