ஒரு மாத குர்ஆன் பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வரும் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை தொழுவிக்க இமாம்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். கொள்கை சார்ந்த இமாம்கள் கிடைப்பது பெரும் கஷ்டமாக உள்ளது. எனவே மாநிலத் தலைமை இந்நிலையை கவனத்தில் கொண்டு திருக்குர்ஆனை அழகிய முறையில் மனனம் செய்து  தொழுகை பயிற்சியும் பெற்று நபிமொழியின்படி தொழுவிக்கும் இமாம்களை ஒரு மாத பயிற்சியில் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
உங்கள் கிளைக்கு இமாம்கள் தேவை எனில் உங்கள் கிளையில் உள்ள திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவர்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் உச்சரிப்பு பிழையின்றி ஓதவும் மனனம் செய்யவும் தொழுவிக்கவும் பயிற்சி அளித்து அனுப்புகிறோம். உணவு, உறைவிடம் அனைத்தும் இலவசம்.
பயிற்சி ஏப்ரல் 15 முதல் மே 14 வரை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
கீழ்க்கண்ட லிங்கில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

download link

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தவர்கள். அதை பூர்த்தி செய்து மாநிலத் தலைமைக்கு பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு
30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை -1,
விண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் 31-03-2017
தொடர்புக்கு  :  மாநிலச் செயலாளர் இ.பாரூக் (9952056444)