ஒரு மாதத்திற்குள் வக்ஃப் போர்ட் மூலம் சுப்ரிம் கோர்ட்டில் மேல் முறையீடு: AIMPLB முடிவு!

ஆல்இந்திய முஸ்லிம் பர்சனல் லா போர்ட்டின் (All-India Muslim Personal Law Board) பாபர் மஸ்ஜி கமிட்டி பொறுப்பாளரான டாக்டர் இலியாஸ் அவர்கள் நேற்று (4-10-2010) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ”முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விஷயத்தில் அதிர்ப்தியில் உள்ளனர்.

எனவே இன்னும் ஒரு மாதத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பாக வக்ஃப் போர்ட் சார்பாக மேல் முறையீடு செய்யப்படும். மேலும் இது பற்றிய கலந்தாய்வு வருகின்றது 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.