ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி!

Download in PDF

1.

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு?
அந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.
இனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி
சிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே!
இப்போதே தயாராவீர்! பயணத்திற்கு முன்பதிவு செய்வீர்

2.
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு
இதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு
இந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்
இரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி
டி.என்.டி.ஜே. நடத்தும்

ஒடுக்கப்பட்ட சமுதாயமே! உரிமைக் குரல் எழுப்ப ஓடி வா!
ஒதுக்கப்பட்ட சமுதாயமே! ஒதுக்கீடு பெற ஒன்றிணைந்து வா!
அரசியலில் ஓட்டுப் பொறுக்குவதிலும்
தேர்தலில் சீட்டுக் கேட்பதிலும்
நாட்டம் கொள்ளாத உங்களின் ஒரே அமைப்பு
உங்கள் நம்பிக்கை நட்சத்திரம்
உங்கள் உரிமைக் குரல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்காக மத்திய அரசுப் பணிகளில் 10 % இட ஒதுக்கீடு கோரி நடத்தும்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
வெற்றியின் முகவரிகளே!
வங்கக் கடல் வழித்தடம் மாறியதோ என்று வியக்க தீவுத் திடலில் சங்கமிக்க வாரீர்!
ஒரு சரித்திரம் படைக்க வாரீர்!

3. ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
குடந்தையை குலுங்கச் செய்த பேரணி கண்டு
தமிழகத்தை உலுக்கிய சிறை நிரப்பும் போராட்டம் கண்டு,
மாநிலத்தில் 3.5 % இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து உங்கள் அபிமான அமைப்பு
மத்தியியிலும் மாநிலத்திலும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி 10 % இட ஒதுக்கீடு பெற்றுத் தர
இம்மாநாட்டிற்குக்குக் குடும்பத்துடன் வர உங்களை அன்புடன் அழைக்கின்றது.
இட ஒதுக்கீடு மத்தியில் சட்டமாக!
திரள்வோம் தீவுத் திடலில் சமுத்திரமாக!

4.
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
சமுதாய நலனையே தனது நலனாய் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 % இடஒதுக்கீடு பெறுவதற்காக நடத்தும் கோரிக்கை மாநாட்டிற்கு முஸ்லிம்களே குழந்தைகளுடன் வாரீர்! குடும்பத்துடன் வாரீர்!
தலைநகர் டெல்லியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சட்டமாக!
தலைநகர் சென்னையில் திரள்வோம் சமுத்திரமாக! சரித்திரமாக!

5.
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
திருப்புமுனையாகட்டும் தீவுத்திடல் மாநாடு!
தில்லி நாடாளுமன்றத்தில் சட்டமாகட்டும் இடஒதுக்கீடு!
அன்று மாநிலத்தில் முஸ்லிம்களுக்காக
நின்று போராடி 3.5% இட ஒதுக்கீட்டை
வென்று காட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இன்று மத்தியியிலும் மாநிலத்திலும் 10% இடஒதுக்கீட்டைப் பெற அழைக்கிறது
முஸ்லிம் சமுதாயமே!
வங்கக் கடலுக்கு இணையாய்
சங்கமிப்போம் தீவுத் திடலில்!
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை
சட்டமாக்குவோம் நாடாளுமன்ற அவையில்!

6. ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை
விடுதலைப்போரில் வீசியெறிந்தது நம் சமுதாயம்
இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!
விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை
பிடுங்கி எறிந்தது இந்திய அரசாங்கம்
இது இந்த தேசத்திற்கே அவமானம்
இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!
முஸ்லிம் சமுதாயமே
தீவுத் திடலுக்கு விரைவீர்!
திருப்புமுனை காண்பீர்

7.
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
கிடப்பில் கிடக்கும் ரங்கநாத் அறிக்கை
குப்பையில் போகாமல் தடுக்க
நடப்பு நாடாளுமன்றத் தொடரிலேயே
நமக்கு அது சட்டமாக
குழுமுவோம் தீவுத் திடலில்
குவித்திடுவோம் வெற்றியை!

8.
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ரணகளமானது நாடாளுமன்றம்
ஆனாலும் போராடி நிறைவேற்றியது மன்மோகன் அரசாங்கம்
ரங்கநாத் பரிந்துரையை நிறைவேற்ற மட்டும் கருத்தொற்றுமை வேண்டுமாம்
கருத்தொற்றுமை என்பது கல்லில் நார் உரிப்பதாகும்
கனியட்டும் காலம் என்பது இலவு காத்த கிளியாகும்
பிரதமரின் பிரமாத பேச்சில் ஏமாற மாட்டோம்
இட ஒதுக்கீட்டை இழக்க மாட்டோம் என்று பறைசாற்ற
தீவுத்திடலில் கூடுவோம்
திருப்புமுனையை உருவாக்குவோம்.

9

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
ஈராண்டுக்கு ஒரு மாதம்
மட்டுமே குடும்ப வாசம்!
இதர நாட்கள் எல்லாமே
அரபு நாட்டில் வனவாசம்.

வேண்டுமா? இந்த கதி – நம்
சந்ததிக்கு! என்று யோசி!
இடஒதுக்கீடு ஒன்றே
இதற்கு விடிவு என்று

தீவுத் திடலுக்கு வந்திடு!
தீர்வு ஒன்றைக் கண்டிடு!
10

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
வாழ்வாதாரம் தேடி
வளைகுடா சென்றோம்
வனப்பான வாலிபத்தை – பாலை
வனத்தில் இழந்தோம்.

நாளைய தலைமுறைக்கு
வேண்டாம் இந்த சோதனை –
வேண்டாம் இந்த வேதனை என்று
வேண்டுகிறோம் இடஒதுக்கீட்டில் ஒரு சாதனை!

இந்த சாதனை படைக்க,
ஒரு சரித்திரம் உருவாக்க
தீவுத் திடல் வருக!
திருப்புமுனைத் தருக!

11
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை

இன்று நாம் பெறுகின்ற இடஒதுக்கீடு –
நாளைய தலைமுறைக்கு நாம் செய்கின்ற ஏற்பாடு!
இட ஒதுக்கீடு ஆயுதம் பெற
இப்போதே சென்னைக்கு ஆயத்தமாவோம்!

அந்நியரை விரட்டுகின்றது அரபு நாடு! நமது
மண்ணில் நமக்கு அவசியமாகிறது இடஒதுக்கீடு!
இதற்கு நாம் காண்பதே ஒடுக்கப்பட்டோரின்
உரிமை மாநாடு! நாள்: ஜூலை 4, 2010.
இடம்:    தீவுத் திடல், சென்னை.
இலட்சியத்தை அடைந்திட – தீவுத் திடலில்
இலட்சங்களாகக் குவிந்திடு!

12

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: ஜூலை 4, 2010. இடம்: தீவுத் திடல், சென்னை.
இன்றைய தேர்தலை கவனத்தில் கொள்ளாமல்
நாளைய தலைமுறையைக் கவனத்தில் கொண்டு

TNTJ நடத்துகின்ற இம்மாநாட்டிற்கு அணி அணியாய் வாரீர்!
அழைக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

13
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு

நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010

இடம்: தீவுத் திடல் சென்னை

நீ அரபு நாடு செல்லும் போது
உன் பிள்ளை இருந்தது கருவில்!
நீ நாடு திரும்பும் போது
அவன் இருந்தான் பெரிய ஆண்பிள்ளை உருவில்!
இது தான் அரபக வாழ்க்கை!
இனியும் வேண்டுமா இந்த வாழ்க்கை!
சிந்தியுங்கள்! தீவுத் திடலில் சந்தியுங்கள்!

14

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010

இடம்: தீவுத் திடல் சென்னை
படிப்பேதும் இல்லாததால்
அடுப்பூதுகின்றோம்! அரபகத்தில்
ஆடு மேய்க்கின்றோம்! ஆட்டை விட
கேடாய் அடிமைப் படுகின்றோம்
தலைமுறைக்கும் வேண்டாம்
இந்த அவமானம்! என்று
தலைநிமிர கேட்கின்றோம்
தனிஒதுக்கீட்டு பகிர்மானம்!

அந்த – தனிஒதுக்கீடு பெறுவதற்கு
தலைநகர் நோக்கி – இப்போதே
தயாராகட்டும் நமது பயணம்!

15

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010

இடம்: தீவுத் திடல் சென்னை
பசித்து அழும் எங்களுக்கு
சாதா பால் தராத மைய அரசு!
பசிக்காத பெண்களுக்கு
பாதாம் பால் கொடுக்கின்றது.
கேட்டும் தரவில்லை எங்களுக்கு ஒதுக்கீடு!
கேட்காமலே தருகின்றது பெண்களுக்கு ஒதுக்கீடு!

ஏனிந்த பாகுபாடு?
என்று கேட்கவே
இந்த மாநாடு!
என் நண்பா! நீயும் அதற்கு ஒரு நாளை ஒதுக்கீடு!

16
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
பசித்து அழும் முஸ்லிம்களுக்கு
பழைய சாதம் தராத மைய அரசு
பசிக்காத பெண்களுக்கு 33மூ சதம்
புலவு சாதம் போடுகின்றது!

கேட்ட எங்களுக்கு தரவில்லை ஒதுக்கீடு
கேட்காத பெண்களுக்கு தருகிறாய் ஒதுக்கீடு
10% பங்கீடு! மத்திய அரசே எங்களுக்கு தந்திடு!
என்று கோரி, தீவுத்திடல் வந்திடு!

17
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
அயல்நாடுகள் போவதற்கு
வயல்காடுகள் விற்போனே!
இனி இந்தியாவிலேயே பிழைப்பதற்கு
இடஒதுக்கீடு கண்டிடு!

இடஒதுக்கீட்டை வென்றிட
சென்னைக்கு நீ வந்திடு!

18
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
டாக்டர்கள், இன்ஜினியர்கள்!
நம் சமுதாயத்தில் தட்டுப்பாடு
இடஒதுக்கீடு இல்லாததால்
நமக்கு இந்த இடர்பாடு

இடஒதுக்கீடு ஒன்றே
இதற்கு தீர்வாகும்
தீவுத்திடல் கடலானால்
தில்லியில் இது சட்டமாகும்

சென்னைக்கு சென்றிடு!
இடஒதுக்கீடு வென்றிடு!

19
ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
அரிச்சுவடு படிக்காததால் – நமக்கு
அரபு நாட்டு அடுப்படி! இதை
உடைப்பதற்கும், நாம் உயர்வதற்கும்
இடஒதுக்கீடே நமக்கு முதற்படி!

மத்தியில் இடஒதுக்கீடு பெற
யுத்தி செய்வோம் தீவுத்திடலில்!

20

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
பாஸ்போர்ட்டுக்கும் ஏர்போர்டுக்கும் ஏங்கிய காலம் இனி வேண்டாம்!
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடே இனி வேண்டும்!

21

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
அயல்நாடுகள் போய்வர வயல்காடுகளை விற்போனே,
இடஒதுக்கீடு கிடைத்துவிடும், இந்தியாவில் பிழைப்போமே!
22

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
ஓட்டு வங்கியாய் இருந்தது போதும்! – இனி
உரிமை  வாங்கியாய் பரிணமிப்போம்!

23

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
தரித்திரம் படர்ந்ததை மாற்றி – இனி
சரித்திரம் படைப்போம், வா!