ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான்! நீங்கள் எப்போது?..

anna-university1டென்மார்க்கில் ஐ நா சார்பில் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்க உள்ள பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி மா நாட்ட்டில் அண்ணா பல்கலை கழகத்தில் படிக்கும் கம்பத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சலீம் கான் பங்கேர்க்க உள்ளார், இன்ஷா அல்லாஹ். இந்த மாநாட்டில் 140 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேர்க்க உள்ளனர்.

மாணவ! மாணவிகளே! நீங்களும் இது போல் வாழ்வில் சாதனை நிகழ்த்த வேண்டும் எனில் அண்ணா பல்கலை கழகம் போல் உயர் கல்வி நிறுவனக்களில் படிக்க வேண்டும், அதற்க்கு தேர்வில் அதிக மதிப் பெண் எடுக்க வேண்டும், +2 படிக்கும் மாணவர்களே! பொறியியலில் (தோராயமாக) குறைந்தது 185 கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அண்ணா பல்கலைகலகத்தில் இடம் கிடைக்கும். அண்ணா பல்கலை கழகத்தில் கல்வி கட்டணமும் குறைவுதான், ஆனால் இங்கு படிப்பதால் நாம் உலகலாவிய கல்வி தரத்திற்க்கு நமது கல்வி திறனை வளர்த்து கொள்ள முடியும்,

தேர்வு காலம் நெருங்குவதால் மிகவும் கவனமாக படியுங்கள். நம்மிடம் பணம் உள்ளது நம் தந்தை எப்படியாவது பணம் கட்டி ஏதாவது (முஸ்லீம்) கல்லூரியில் சேர்த்துவிட்டுவிடுவார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். என்னதான் பணத்தை கொட்டி கொடுத்து படித்தாலும் அண்ணா பல்கலை கழகத்தில் கிடைப்பது போல் கல்வி அறிவோ, வேலை வாய்ப்பு வசதிகளோ தனியார் பொறியியல் கல்லூரிகளில் கிடைப்பதில்லை.

முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் சேர இருக்கும் மணவர்களே! பொதுவாக முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் கல்வி தரம் மிக குறைவாகவே உள்ளது, ஆனால் இவர்கள் வாங்கும் பண்ணமோ மிக மிக அதிகமாக உள்ளது. எனவே முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை தூக்கி போடுங்கள், அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலை கழகம் போல் நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்.

நமது TNTJ மாணவரணி மாணவர்களை தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்க பல்வேறு வீடியோக்களையும், கையேடுகளையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றது, மேலும் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் பயிர்சி முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.

நம்முடைய மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து மிக குறைந்த செலவில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து நன்றாக படித்து எளிதில் வேலை பெற்று முன்னேற வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

செய்தி:
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி