ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி

iasஜூன் 9: சென்னை வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் அரசுப்பணி தேர்வுகளுக்கான முழுநேர பயிற்சி வகுப்புகள் வரும் ஜுன் 15-ம் தேதி தொடங்குகிறது.

அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பி. கன்னியப்பன், பி.எஸ்.ஏ. கிரசண்ட் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் எம்.எப். கான் ஆகியோர் இதுகுறித்துக் கூறியது:

இதுவரை 60 மாணவர்கள் எங்களது பயிற்சி மூலம் பல்வேறு இந்திய அரசுப் பணிகளில் உள்ளனர்.

தற்போது பொது அறிவுப்பாடத்துடன் வரலாறு, பொது நிர்வாகம், சமூகவியல், புவியியல், மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய விருப்பப் பாடங்களில் முழுநேர, மற்றும் பகுதி நேர பயிற்சி வகுப்புகளைத் தொடங்குகிறோம்.

முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜுலை மாதம் தொடங்குகிறது. பத்து மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பகுதி நேரப்படிப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்றனர்.

மேலும் விபரங்களுக்கு, தொலைபேசி எண் 044-22751155, செல் 9840259611.

-தினமணி