ஏழை முஸ்லிம்கள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட இலவச வேட்டி சேலை!

idara_savaiமுஸ்லிம்களின் புனித நோன்பு முடிந்தபின் சுற்றம் சூழ ஊர் மக்களுடன் மகிழ்வாகக் கொண்டாடும் நோன்புப் பெருநாள் அன்று அனைத்து ஏழைகளும் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 390 ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி சேலைகள் பனைக்குளம் TNTJ மர்கசில் வைத்து வழங்கப்பட்டது.
பொது நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாங்க தயங்கியவர்களுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று விநியோகித்தனர். இதில் மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது, மாவட்ட பொருலாளர் அ. ஷாஹூல் ஹமீது மற்றும் கிளை செயலாளர் வருசை முஹம்மது, உதவித் தலைவர் அஸ்வர்தீன் பொருளாலர் அஸாஜூத்தீன், மற்றும் கம்பம் ஷாஹூல் ஹமீது ஆகியோர் பங்கு பெற்றனர்.