ஏழை பெண்ணிற்கு வீடு கட்ட ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சுகுணாபுரம் கிளையின் சார்பாக கணவனை இழந்த பெண்ணுக்கு தங்களால் ஆனா பொருளாதாரத்தின் மூலம் ஒரு வீட்டை அமைத்து கொடுப்பதற்கான முயற்சியில் கிளை நிர்வாகிகள் இறங்கினர். இருந்தாலும் பொருளாதார பற்றாக்குறையின் காரணமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகினர்.

இப்பணிக்காக மாநில தலைமையின் மூலமாக பெறப்பட்ட ரூபாய் 25,000/-ஐ கடந்த 22-9-2010 அன்று மாவட்ட செயலாளர் நவ்ஷாத் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.