ஏழை குடும்பங்களுக்கு 33 ஆயிரம் ரூபாய் நிதியுதவிகள்!- கால்பட்டிணம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் கிளை சார்பாக 21.11.2011 அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கோமான் தெருவைச் சேர்ந்த சகோதரர் ரவுப் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ட்ரில் மிசீன் வாங்குவதற்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலப்பள்ளி தெருவைச் சேர்ந்த சகோதரி மர்யம் அவர்களின் சிறுநீரக அறுவை சிகிட்சைக்கு 3,000 வழங்கப்பட்டது.

சகோதரர் காஜா முஹைதீன் அவர்களின் மகன் முஹம்மது நாஜிம் அவர்களின் உயர்கல்விக்கு 2,000 வழங்கப்பட்டது.

நெய்னா முஹம்மது அவர்களின் மகள் மெஹதூம் நஸீபா அவர்களின் மருத்துவத்திற்கு (அல்சர்) ரூபாய் 3,000 வழங்கப்பட்டது.

கோமான் மேலத்தெருவைச் சேர்ந்த சகோதரர் தைக்கா உமர் அவர்களின் கை எலும்பு முறிவு அறுவை சிகிட்சைக்கு 3,000 வழங்கப்பட்டது.

சகோதரி ஆமினா அவர்களின் மருத்துவத்திற்கு (கர்ப்பப்பை கோளாறு) ரூபாய் 2,000 வழங்கப்பட்டது.

சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் 6 மாத குழந்தையின் (இபுராஹீம்) கழுத்தில் உள்ள கட்டியை அகற்றிட ருபாய் 10,000 வழங்கப்பட்டது.

நெசவுத் தெருவைச் சேர்ந்த சகோதரர் நசீர் அவர்களின் கடை தீ விபத்தினால் பாதிக்கப்பட்டது. இதை சரி செய்ய 5,000 வழங்கப்பட்டது.