ஏர்வாடி கிளையில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் எரவாடி கிளையில் கடந்த 7-11-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பிலும் மாநில தலைவர் சகோதரர் பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள். மேலும் கூட்டத்தில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இருதியாக சகோதரர் M .A .K முஹைதீன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள். ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.