எஸ்.பி.மைதீன் குற்றச்சாட்டு – நெல்லை TNTJ விளக்கம்

மேலப்பாளையத்தில் நகர தலைவராக இருந்த எஸ்.பி. மைதீன் என்பவர் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பெண் தொடர்பு குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே ஜமாஅத் பணிகளில் இருந்து விலகி விட்டார்.

எனவே இவரை 30.04 .2010 அன்று நகர செயற்குழு கூடி பொறுப்பிலிருந்து நீக்கியது.

புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானது. அதன் பின்னர் பெண் தொடர்பு குற்றச்சாட்டு எழுந்தவுடன் இவரை அழைத்து விசாரித்த போது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அவர், தான் வகித்து வந்த மஸ்ஜிதுர் ரஹ்மான் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டு ஜமாத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

மேற்படி குற்றச்சாட்டுக்கு பிறகு நடைபெற்ற டி.என்.டி.ஜே. பொதுக்குழு மற்றும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பொதுக்குழு ஆகியவற்றில் எஸ்.பி. மைதீனுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை.

அவருடன் ஜமாஅத் உறுப்பினர்கள் ஜமாஅத் ரீதியாக எந்தத் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மேற்படி பொதுக்குழுவில் பகிரங்கமாக அறிவிப்பும் செய்யப்பட்டது.

தற்போது எஸ்.பி. மைதீன் டி.என்.டி.ஜே.யின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.