எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசலில் நடந்த பிரச்சினைகள் குறித்தும், நமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் விளக்கமளிப்பதற்காக மாவட்ட தலைமையகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு 02/08/2009 ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சகோ:ஸைபுல்லாஹ், மாவட்ட பொருளாளர் சகோ:மாலிக், மாநில பொதுச்செயலாளர் சகோ:அப்துல் ஹமீது, மாநிலச்செயலாளர் சகோ:சாதிக், மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ:P.ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சகோ:P.ஜைனுல் ஆபிதீன் பத்திரிக்கையாளர்களிடம் ‘S.P.பட்டினம் பள்ளிவாசல் சட்ட ரீதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமானது.இதில் உள்ளுர் ஜமாத்தினரோடு திமுகவைச்சேர்ந்த முக்தார் என்பவரும்இஹசன் அலி என்பவரும் சேர்ந்து கொண்டு மாவட்ட R.D.O மற்றும் காவல்துறையை கைக்குள் போட்டுக்கொண்டு அமைச்சர்கள் சுப.தங்கவேலன் மற்றும் பெரிய கருப்பன் ஆகியோர் மூலமாக முட்டுக்கட்டை போடுகிறார்கள்.அமைச்சர்கள் தாங்கள் பணியை செய்வதை விட்டு விட்டு இதில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.இல்லா விட்டால் எங்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.நாங்கள் இந்த நேரத்தில் தமிழக அரசுக்கும், முதல்வர்.கருணாநிதிக்கும், அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்கிறோம். நாங்கள் எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர்களில்லை.

எங்களுக்கு எந்த சுய லாப நோக்கமுமில்லை.மக்களின் நன்மை கருதியே எங்கள் போராட்டம் தொடரும்.முறையான ஆவணங்களை நாங்கள் கொடுத்த பின்னர் பள்ளிவாசல் சாவியை எங்களிடம் ஒப்படைத்த அதிகாரிகள் வருகின்ற 06-08-2009 வரை பள்ளிவாசலை திறக்கக்கூடாதென்றும் அதன்பின்னர் மறுஉத்தரவு மூலம் அனுமதி தருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வாறு நடக்காத பட்சத்தில் 07-08-2009 அன்று மாநில செயற்குழுவை கூட்டி மாநிலம் முழுவதும் இருந்த லட்சக்கணக்கா மக்களை திரட்டி பெங்களுர் சென்றுள்ள முதல்வர் திரும்பியவுடன் அவர் வீட்டை முற்றுகையிடுவது என்றும்,அதன் பின்னர் வருகிற வெள்ளியென்று மக்களை திரட்டி S.P.பட்டினத்தில் நமக்கு சொந்தமான பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதுஇஅப்பொழுது வருகின்ற எந்த எதிர்ப்புகளையும் சந்திக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது’ என்றும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தி பத்திரிக்கைளில் வெளியானது:

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!