எஸ்.பி பட்டிணத்தில் நியாத்திற்கு எதிராக நடந்த அராஜகத்தை கண்டித்து கோவையில் நடந்த கமிஷ்னர் அலுவலக முற்றுகை

எஸ்.பி பட்டிணத்தில் நியாத்திற்கு எதிராக நடந்த அராஜகத்தை கண்டித்து கோவையில் நடந்த கமிஷ்னர் அலுவலக முற்றுகைஎஸ்.பி பட்டிணத்தில் நியாத்திற்கு எதிராக நடந்த அராஜகத்தை கண்டித்து கோவையில் நடந்த கமிஷ்னர் அலுவலக முற்றுகைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளும் ராமநாதபுரம் மாவட்ட மற்றும் S.P பட்டினம் கிளை நிர்வாகிகள். பள்ளிவாசலின் உள்ளே அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி 31.07.2009 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு சற்றுமுன்தான் கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கு கிடைத்தது.

தொழுகை முடிந்தஉடன் உடனடியாக செயல்பட்ட கோவை மாவட்ட TNTJ நிர்வாகிகள். காவல்துறை கமிஷனர் அலுவலக முற்றுகை போராட்டம் என்று அறிவித்தனர்.

சமரசம் செய்ய பலதரப்பினர் முயற்சி செய்தும் ஏற்றுக்கொள்ள மனம் தரவில்லை எனவே கோவை மாவட்ட தலைவர் முஹம்மத்அலி தலைமையில் மாவட்ட செயலாளர் உமர்பாரூக் முன்னிலையில் நூற்றுக்கனக்கானோர் கோவை உக்கடம் பேருந்துநிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காவல்துறை கமிஷனர் அலுவலகம் முற்றுகையிட புறப்பட்டனர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்துநிலையம் ஒருமணி நேரத்திற்கு மேலாக ஸ்தம்பித்து போனது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் நமது சகோதரர்களை கைது செய்து சமூகக்கூடத்தில் வைத்தனர்.மாலை 6-மணிக்கு விடுதலை செய்தனர்.