புதுமடத்தில் எரிவாயு முறைகேடுகள் குறித்து கலக்டரிடம் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிராமத்தில் தனியார் எரிவாயு ஏஜென்சிகளின் எரிவாயு விநியோகத்தில் பல குளறுபடிகளும்,மோசடிகளும்,அழைக்களிப்பும் தொடர்ந்து இருந்து வருவதால் இதனை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் விதமாக இன்று (12 .10 .10 ) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கலெக்டர் சந்திப்பில் புதுமடம் TNTJ கிளை சார்பில் கிளை நிர்வாகிகளோடு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடம் தனியார் எரிவாயு ஏஜென்சி பிரதிநிதிகளின் முன்னிலையிலேயே அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி குறைகள் சரிசெய்வதற்க்குண்டான வழிவகைகள் செய்யப்பட்டது.