எட்டையாபுரத்தில் தூத்துக்குடி TNTJ யின் தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அயன்வடமலாபுரம் என்ற முஸ்லீம் கிராமம். இவ்வூரில் முஸ்லீம் குடும்பங்கள் 10 உள்ளது.

அல்லாஹ்வின் இறையில்லமும் உள்ளது. இங்கு 5 நேரம் தொழுகை மற்றும் ஜூம்ஆ தொழுகைகள் எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தி தூத்துக்குடி மாவட்ட தலைமையகத்திற்கு வந்தது.

இவ்வூரின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக கடந்த  20.2.2011 அன்று மாலை 4 மணியளவில் அன்சாரி மற்றும் கோவில்பட்டி நகர நிர்வாகிகள் சென்ற போது பள்ளிவாசல் முடப்பட்டிருந்தது.

பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளிவாசல்களில் வணக்கங்கள் நடைபெறுகின்றதா? என்பது போன்ற விபரங்களை தெரிந்து கொண்டதும் அதிர்ச்சியாக இருந்தது.

உடனே பள்ளிவாசலில் அஸர் தொழுகை தொழுது விட்டு ஊரின் முக்கிய பிரமுகர்களிடம் வணக்கங்களின் அவசியத்தை வலியுறுத்திவிட்டு இவ்வுரில் 20 பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரை நிகழ்த்துங்கள் என்ற வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக பள்ளிவாசல் தலைவர் வீட்டில் வைத்து பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தங்களுடைய வாழ்வில் இதற்கு முன்னால் இது போன்ற நிகழ்ச்சிகள் எதுவுமே நடைபெறாத காரணத்தினால் பெண்கள் அனைவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.

பயான் முடிந்ததும் கேள்விபதில் நிகழ்ச்சி நடந்தது. இணைவைத்தல், தொழுகை முறை, வரதட்சனை போன்ற கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளிக்கப்பட்டது.

இது போன்று பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடத்துமாறும் பள்ளியில் 5 வேளை பாங்கோசை கேட்பதற்கு வழிவகை செய்யுங்கள் என்று பெண்கள் கோரிக்கை வைத்தார்கள்.

உங்கள் ஊரிலே மார்க்கம் படிக்க பெண்களை அனுப்பிவையுங்கள் என்று ஆலோசனை கூறியதும் 3 பெண்கள் நாங்கள் கல்லூரி படிப்பபை முடித்தவுடன் ஆலிமா படிக்க போவதாகவும் மதரஸாவில் எங்களை சேர்ப்பதற்கு தாங்கள் உதவி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதே போல் பேச்சாளர்களை உருவாக்குவதற்காக மார்ச் மாதம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 1 மாதம் தாயி பயிற்சிக்கு அந்த ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் வர விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்!