ஊழல் மற்றும் ஓரினச் சேர்க்கையால் போப் கவலை!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத குருவான போப் பிரான்ஸிஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பாதிரியார்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது வாடிகன் நிர்வாகத்தில் மிகப் பெரும் ஊழல்கள் நடக்கின்றன. இந்த ஊழல்கள் குறித்து இந்த வாடிக்கன் நிர்வாகிகள் கவலைப்படுவதில்லை. மேலும் இங்குள்ள சிலர் ஓரின சேர்க்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் வாடிகன் நிர்வாகத்திற்கு மிகப் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகளின் இந்த செயல்பாடுகள் வருத்தமளிக்கின்றன. கூடிய விரைவில் இவற்றை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.  

போப் பிரான்ஸிஸ் புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை. வாடிகன் நிர்வாகத்தில் காலம் காலமாக உள்ள குறையைத்தான் இப்போது சொல்லியுள்ளார்.

இந்தக் குறைகளை சரி செய்வதற்குத் இவருக்கு முன்னால் இருந்த போப் எவ்வளவோ பாடுபட்டார். அதில் அவரால் வெற்றி காணமுடியவில்லை. கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது.

இப்படி திருமணம் செய்வதற்கு தடை இருப்பதால்தான் சில பாதியார்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள். அன்னியப் பெண்களோடு தவறான பாலியல் உறவை ஏற்படுத்திய கொள்கிறார்கள் என்பதை அறிந்த கிறிஸ்தவ போப், பாதிரியார்கள் திருமணம் செய்யலாம் என அறிவிக்க நினைத்தபோது அவருக்கு மதத் தலைவர்களிடமிருந்து நெருக்கடிகள் ஏற்பட்டன.

பாதிரியார்கள் திருமணம் செய்ய தடை விதித்தால் முறையற்ற பாலியல் உறவுகள் ஏற்படத்தான் செய்யும்; என்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் இதைத் தடுக்கவே முடியாது. திருமணத்தையும் அனுமதிக்க முடியவில்லை.

செக்ஸ் வக்கிரங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நொந்து போனார் பழைய போப். பாதிரியார்கள் திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும்; இல்லையேல் என்னதான் முயன்றாலும் பாதிரியார்களின் செக்ஸ் வக்கிரங்களை குறைக்கவே முடியாது. இதை போப் பிரான்ஸிஸ் உணர்ந்து துணிச்சலான முடிவுகளை எடுப்பாரா? அல்லது பாலியல் வக்கிரங்கள் அதிகரிக்குமாறு புண்ணுக்கு புனுகு பூசும் வேலையைச் செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.